நடிகை ஜனனி தனது காதலரான விமானி சாய் ரோஷன் ஷாமை இன்று திருமணம் செய்து கொண்டார்.
அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜனனி. அந்தப் படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரைப் பெற்றார்.
தொடர்ந்து தெகிடி, பலூன், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாக பணியாற்றி வரும் சாய் ரோஷன் ஷாம் என்பவரை நடிகை ஜனனி பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தார்.
கடந்தாண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இந்த நிலையில், சாய் ரோஷன் ஷாம் - ஜனனி ஜோடி இன்று குடும்பத்தினர் முன்னிலையில் மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிகழ்வில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துக் கொண்டனர்
மேலும் இது போல சினிமா செய்திகளுக்கு எங்களை பின்தொடருங்கள்
💬 Comments
No comments yet.